சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). தச்சுத்தொழிலாளி. இவர், குடும்ப தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட செந்திலுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.