சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (19) என்பவர், நேற்று முன்தினம் புது ஏரிக்கு குளிக்கச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் அய்யனார் ஆகியோர் அவரது சித்தப்பா மகன் கவுதமைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட ஸ்ரீதர் மீது கோபி கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த ஸ்ரீதர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.