சேலம் அஸ்தம்பட்டி ராம்நகரைச் சேர்ந்த மாலா (66) என்பவரிடம், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த அவரது மகன் ராகவ் கிருஷ்ணா (36) மற்றும் அவரது மனைவி அமிர்தா (36) ஆகியோர், தாயிடம் ரூ. 6 லட்சம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால், மாலா அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலி மற்றும் 5 பவுன் என மொத்தம் 12 பவுன் நகைகளை கணவன்-மனைவி இருவரும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாலா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.