வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று கோட்ட மேலாளர் பன்னாலால் தலைமையில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதில் கூடுதல் கோட்ட மேலாளர் சரவணன், கோட்ட பணியாளர் நல அலுவலர் கிருஷ்ண முத்துராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டங்கள் தேசத்தின் பெருமையையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறுகின்றன.