சேலம் மத்திய சிறையில் செல்போன், சிம் கார்டு பறிமுதல்

62பார்த்தது
சேலம் மத்திய சிறையில் செல்போன், சிம் கார்டு பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று சிறையில் 14-வது தொகுதியில் சிறை வார்டர்கள் சோதனை நடத்தினர். அப்போது கைதிகள் மோகன்ராஜ் (வயது 25), சதீஷ்குமார் (25) ஆகியோரிடம் சிம்கார்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரித்த போது, அவர்களுக்கு இந்த சிம் கார்டை யுகேந்திரன் (வயது 26) என்ற கைதி கொடுத்தது தெரியவந்தது. இதனிடையே 13-வது தொகுதியில் ரசீத் (36) என்ற கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன் ஒன்றும் மீட்கப்பட்டது. அவரிடம் விசாரித்த போது, இந்த செல்போனை நீலகண்டன் (30) என்ற கைதி தன்னிடம் ஒப்படைத்து வைத்திருந்ததாக கூறி உள்ளார். 

பின்னர் கைதிகளிடம் செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்தது தொடர்பாக சிறை சூப்பிரண்டு வினோத் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய கைதிகளான மோகன்ராஜ், சதீஷ்குமார், யுகேந்திரன், ரசீத், நீலகண்டன் ஆகிய 5 பேரும் உறவினர்களை சந்திக்க 3 மாதம் தடை விதித்து சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you