கோவை ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

303பார்த்தது
கோவை ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு
சேலம் வழியாக செல்லும் கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன் இயக்க காலம் நடப்பு வாரத்துடன் முடிவடைய இருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் மார்ச் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.