சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போகிப் பண்டிகையின் போது பழைய பிளாஸ்டிக், செயற்கை இலைகள், ரப்பர் பொருட்கள், டயர் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், உடல்நலக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாட அவர் அறிவுறுத்தியுள்ளார்.