சேலம்: புதிய மாநிலங்களவை உறுப்பினர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து

64பார்த்தது
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களுக்கு நேற்று அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்த சான்றிதழுடன் இன்று (ஜூன் 13) பிற்பகலில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி