சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேற்று புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டண மற்றும் கட்டணமில்லா கழிப்பிடங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், நடைபாதைகளில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதா, மோட்டார் சைக்கிள்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். புதிய பேருந்து நிலைய கழிவறைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.