கூட்டுறவு சங்க ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
கூட்டுறவு சங்க ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி ஆர்ப்பாட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் அசோசியேசன் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் பாண்டுரங்கன், மாநில தலைவர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுச் செயலாளர் திருநாவு.

குமரேசன் மாநில பொருளாளர் அன்புக்கரசு மற்றும் மாநில துணைத்தலைவர்கள், மாநில இணை செயலாளர்கள், மகளிரணி பொறுப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் ரூ. 5000 வரை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்று இறந்த பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ. 2500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.