சேலம்: கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல்.. மாற்றுத்திறனாளிகள் கைது

1192பார்த்தது
ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மைக்கேற்ப மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி