சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். எதிர்க்கட்சிகள் திமுகவின் தோழமைக் கட்சிகளைப் பிளவுபடுத்த சதி செய்வதாகவும், ஆனால் திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி என்பதால் ஒருபோதும் பிளவுபடாது என்றும் அவர் கூறினார். மேலும், சேலம் மத்திய சிறையில் உயிர் நீத்த கம்யூனிஸ்ட் தோழர்களின் நினைவாக நினைவுத்தூண் அமைக்கக் கோரிக்கை வைத்தபோது, முதல்வர் உடனடியாக உத்தரவிட்டார்.