10ந்தேதி திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

2பார்த்தது
10ந்தேதி திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆர். ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின்படி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளில் பொறுப்பேற்றுள்ள தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் 5 ரோட்டில் உள்ள கே. எம். பி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கு அமைச்சர் எ. வ. வேலு தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you