சேலம்: பொங்கல் பரிசு தொகுப்பு; வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி

66பார்த்தது
சேலம்: பொங்கல் பரிசு தொகுப்பு; வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 77 ஆயிரத்து 558 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 983 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு என மொத்தம் 10 லட்சத்து 78 ஆயிரத்து 558 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் வகையில் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (ஜனவரி 3) காலை 9 மணி முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி டோக்கன் வழங்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அவர், பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள அனைத்து ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கும் சென்று டோக்கன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி