சேலம் காயம் அடைந்தவர்களுக்கு டாக்டா் ராமதாஸ் மகள் ஆறுதல்

4பார்த்தது
சேலம் காயம் அடைந்தவர்களுக்கு டாக்டா் ராமதாஸ் மகள் ஆறுதல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று முன்தினம் அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அருள் எம்.எல்.ஏ. தரப்பைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பா.ம.க. செயல் தலைவரும், டாக்டர் ராமதாஸின் மகளுமான ஸ்ரீகாந்தி பரசுராமன் சந்தித்து நலம் விசாரித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அருள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். டாக்டர் ராமதாஸ் வன்முறையை ஆதரிக்க மாட்டார் என்றும், இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி