சேலம் கிழக்கு மின் கோட்டத்தில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. உடையாபட்டி காமராஜர் நகர் காலனியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு பங்கேற்று மின் நுகர்வோரின் குறைகளைக் கேட்டறிவார். சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்து தங்கள் மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.