சேலம் கருப்பூர் அருகே, குழந்தை தத்து எடுக்க வந்த தம்பதியிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி ரூ 3 லட்சம் பணத்தை பறித்த ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (48) என்பவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். இவர் ஈரோடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் என கூறி பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. கோர்ட்டில் சரண் அடைந்த அருண்குமாருக்கு வெற்றிவேல் தாய்மாமன் உறவு முறையாகும். இதைத்தொடர்ந்து வெற்றிவேல் உள்பட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.