மனைவியை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

5பார்த்தது
மனைவியை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (62), கடந்த 2010-ம் ஆண்டு தனது மனைவி சின்னபொண்ணுவை (55) அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மனைவியை கொன்ற குற்றத்திற்காக ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி