சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளம் கூட்ட அரங்கம் 215-ல் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரடியாகவும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.