சேலம் அருகே சித்த மருத்துவக்கல்லூரி மாணவி வர்ஷினி, ஜனவரி 7ம் தேதி தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் தந்தை வரதராஜன் தான் கொலை செய்ததாக கண்டறிந்தனர். தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த வரதராஜன் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில், மாணவி வர்ஷினி ஏற்கனவே திருமணமானவரை காதலித்து வந்ததாகவும், அதனை கைவிட மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தந்தை வரதராஜன் கூறியுள்ளார்.