சேலம் அன்னதானப்பட்டி செல்லக்குட்டி காடு பகுதியை சேர்ந்த இன்ஜினியர் வித்யா, நேற்று மாலை தோழியுடன் கோயிலுக்கு சென்று, பின்னர் ஷாப்பிங் செய்துவிட்டு தாமதமாக வீடு திரும்பியுள்ளார். கோயிலுக்கு சென்றால் உடனடியாக வர வேண்டும் என பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வித்யா, வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை சடலமாக தொங்கியதை கண்ட பெற்றோர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.