சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில், 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 55 ஆயிரத்து 830 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 லட்சத்து 70 ஆயிரத்து 967 ஆண் வாக்காளர்கள், 13 லட்சத்து 84 ஆயிரத்து 548 பெண் வாக்காளர்கள் மற்றும் 320 இதர வாக்காளர்கள் உள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 166 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 30,444 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.