சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நிதியுதவி

75பார்த்தது
சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நிதியுதவி
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வனவிலங்குகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வரைபடம் வரைதல், பூங்காவின் மேம்பாட்டிற்காக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விநாயகா மிஷன் விம்ஸ் வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் பங்கேற்று விழிப்புணர்வு வரைபடம் வரையும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பூங்காவின் மேம்பாட்டுக்கு நிதியுதவியை கல்லூரி முதல்வர் செந்தில்குமார், வனபாதுகாவலர் செல்வகுமாரிடம் வழங்கினார். இதில் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர் ஸ்ரீவித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி