சேலம் சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். கர்நாடகம், கேரளம், நாகாலாந்து, மராட்டியம் ஆகிய வெளி மாநில ஆம்னி பஸ்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்ததில், 4 ஆம்னி பஸ்கள் சாலை வரி செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 4 ஆம்னி பஸ்களுக்கு ரூ. 3 லட்சத்து 44 ஆயிரத்து 960 அபராதம் விதிக்கப்பட்டது.