சேலம் கடைவீதியில் உள்ள வ. உ. சி. பூ மார்க்கெட்டில் ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி போன்ற பகுதிகளில் விளையும் குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி போன்ற பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமாக சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிக்கும். தற்போது பனியின் தாக்கத்தால் பூ உற்பத்தி குறைந்துள்ளதால், பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக, கார்த்திகை தீபத்திருநாளையொட்டி நேற்று குண்டுமல்லி ரூ. 2 ஆயிரத்திற்கும், சன்னமல்லி ரூ. 1600க்கும் விற்பனையானது.