சேலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியில் இருந்து விலகல்

1409பார்த்தது
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும், தலைமையும் நிர்வாகிகளும் ஈகோவால் கட்சியை சிதைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உட்கார்ந்து பேசி கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றும், இனி யாரையும் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி