துரோகிகள் பட்டியலில் இருந்தால் விலகி கொள்ள தயார் ஜி. கே மணி

8பார்த்தது
துரோகிகள் பட்டியலில் இருந்தால் விலகி கொள்ள தயார் ஜி. கே மணி
சேலத்தில் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் பேசுகையில், பாமகவில் உட்கட்சிப் பிரச்சினை நிலவும் போது அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அண்ணன் தம்பியாக பழகிய சொந்தக் கட்சியினரே கொலை வெறி தாக்குதல் நடத்தியது எங்கும் நடந்திருக்காது என்றும் கூறினார். அருள் எம்.எல்.ஏ. மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சமூக நீதிக்காக போராடிய டாக்டர் ராமதாஸ் பதவியை தேடி போகவில்லை என்றும், துரோகிகள், கைக்கூலிகள், தீய சக்திகள் என அன்புமணி யாரையெல்லாம் குறிப்பிடுகிறாரோ அவர்கள் தானாக விலகிக் கொள்வதாகவும், அந்த பட்டியலில் தானும் இருந்தால் கூட விலகி கொள்வதாகவும், அப்படியாவது அன்புமணி, ராமதாஸ் ஒன்றிணைகிறார்களா என்று பார்ப்போம் என்றும் தெரிவித்தார். தந்தை, மகன் இடையே நிலவும் பிரச்சினையில் அன்புமணி மற்றவர்களை குறை கூறுவது சரியல்ல என்றும், ஜி.கே. மணிதான் கட்சியை இரண்டாகப் பிரித்து வைத்துள்ளார் என அன்புமணி கூறுவதாகவும், அருளை சாக்கடை என்று கூறுவதாகவும், கட்சிக்காக உழைத்தவர்களை அன்புமணி இப்படி வசை பாடுவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி