சேலம் செல்லக்குட்டிக்காடு குண்டு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கஞ்சா வியாபாரி சண்முகம் (42), கடந்த மாதம் தாதகாப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சேலத்தில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பொது சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். அதன்பேரில், போலீஸ் கமிஷனர் அனில்குமாரி கிரி நேற்று சண்முகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.