ஆயில் நிறுவனங்களுக்கு புதிய டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் கருப்பூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கியாஸ் பாட்லிங் பிளாண்ட் முன்பு நேற்று காலை முதல் 40-க்கும் மேற்பட்ட கியாஸ் டேங்கர் லாரிகள் கியாஸ் நிரப்பாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதாவது மங்களூருவில் உள்ள கப்பல் துறைமுகத்தில் இருந்து கியாஸ் நிரப்பிக்கொண்டு வரும் லாரிகள், கருப்பூரில் உள்ள ஐ.ஓ.சி. பிளாண்டிற்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு இங்கிருந்து சிலிண்டரில் சமையல் கியாஸ் நிரப்பி லாரிகளில் அனுப்பி வைத்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள கியாஸ் வினியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சேலம் உள்பட 10 மாவட்டங்களுக்கு கியாஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.