அரசு தொழிற்பயிற்சி தொழில்நுட்ப அலுவலர்கள் போராட்டம்

3பார்த்தது
அரசு தொழிற்பயிற்சி தொழில்நுட்ப அலுவலர்கள் போராட்டம்
சேலம் கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு, தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த தொழில்நுட்ப அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு மாநில கவுரவ தலைவர் விஜயமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் பயிற்சியை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மண்டல செயலாளர் வசந்தகுமார், மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கிளை தலைவர் உமா உள்ளிட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி