சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த 95 வயதான வெள்ளையம்மாள் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இறப்பதற்கு முன், தன்னை மகிழ்ச்சியுடன் அடக்கம் செய்யுமாறு அவர் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி, அவரது 24 பேரன்கள், 25 கொள்ளுப்பேத்திகள் மற்றும் உறவினர்கள் 10 கிலோ கேக், மேளதாளம், பட்டாசு வெடி, ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று, பாட்டியின் உடல் முன் கேக் வெட்டி தங்கள் துக்கத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர். பின்னர், பாட்டியின் இறுதி ஊர்வலம் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.