கன்னங்குறிச்சி பகுதியில் பாட்டி, பேத்தி தற்கொலை

1845பார்த்தது
கன்னங்குறிச்சி பகுதியில் பாட்டி, பேத்தி தற்கொலை
சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியில் வசிக்கும் 60 வயதான அம்மணி, தனது மாற்றுத்திறனாளி பேத்தி சதாஸ்ரீயுடன் (23) தற்கொலை செய்து கொண்டார். இரண்டு கால்களும் செயலிழந்த சதாஸ்ரீயை குழந்தையாக இருந்தபோது தாயார் பிரிந்து சென்ற நிலையில், பாட்டி அம்மணியும் மகன் ராஜாவும் அவரை கவனித்து வந்தனர். இருப்பினும், சதாஸ்ரீயை கவனிக்க முடியாததால் மனமுடைந்த அம்மணியும் சதாஸ்ரீயும் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி