மாணவிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், சிக்கலை தீர்ப்பதில் தொழில்நுட்பத்தின் ஆற்றலை பயன்படுத்தவும் ஒரு தளத்தை உருவாக்கி படைப்பாற்றல், ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டுக்கான ஊக்கியாக செயல்பட என்ஜினீயரிங் பெண்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. சோனா கல்விக்குழும துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டசால்ட் சிஸ்டம்ஸ், கேட்டியா பிராண்ட் நிறுவன உலகளாவிய துணைத்தலைவர் பெசன் பிரடெரிக், டேங்கேம் இன் நிறுவன தொழில்துறை துணை தலைவர் ராஜேந்திரன், தலைமை இயக்க அதிகாரி விஜயதீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2-ம் பரிசாக ரூ. 50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ. 30 ஆயிரம், மேலும் 7 அணிகளுக்கு சிறப்பு பரிசாக ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. ஏற்பாடுகளை சோனா கல்லூரி மெக்கானிக்கல் துறைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.