சேலத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
சேலத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் ஆய்வுக்கூட்டங்களை அலுவலக நேரத்தில் நடத்த வேண்டும், ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி