தெற்கு ஆர்டிஓ ஆபீஸ்க்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு

1பார்த்தது
தெற்கு ஆர்டிஓ ஆபீஸ்க்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு
சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சேலம் உதவி கலெக்டர் உதயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜபாண்டியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். வாகனங்களின் தகுதி சான்று, உரிமம் புதுப்பிப்பு, அவசர கதவு, முதலுதவிப்பெட்டி, டிரைவரின் ஓட்டுனர் உரிமம், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தம் 89 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ததில், 4 வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி