ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு இன்று நடக்கிறது

2பார்த்தது
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு இன்று நடக்கிறது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி தாலுகாக்களில் உள்ள மையங்களில் 2,416 பேர் எழுத உள்ளனர். தேர்வு காலை மற்றும் மதியம் என இருவேளைகளில் நடைபெறும். தேர்வர்கள் எளிதாக தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி