தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி

1பார்த்தது
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை சுற்றுப்பயணம் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, திமுகவுக்கு எதிர்மறை வாக்குகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.