சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன், பெற்றோரைப் பார்க்க சேலம் வந்தபோது, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை மாடியில் உள்ள அறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிச்சிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.