சேலம் நரசோதிபட்டியில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

1215பார்த்தது
சேலம் நரசோதிபட்டியில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் வண்டியூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார்(28) என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர், சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.