சேலம் டவுன் பகுதியைச் சேர்ந்த செல்போன் உதிரி பாகங்கள் கடை உரிமையாளர் சதாம் உசேன் (34) வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்கம் மற்றும் ரூ. 15 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். குடும்பத்துடன் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தை மர்ம நபர்கள் நடத்தியுள்ளனர். இது குறித்து சேலம் டவுன் போலீசில் சதாம் உசேன் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.