சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

66பார்த்தது
சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
சேலம் கோட்டை குண்டுபோடும் தெரு ராம்நகரை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 33). இவர் நேற்று வீட்டின் கதவை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3½ பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சுபாஷினி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி