தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய், முதல்வர் பொறுப்பேற்றவுடன் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக அறிவி
த்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சேலத்தில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் சரக உதவி ஆணையாளர் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில், காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழி மற்றும் இரண்டு பெண் காவலர்கள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு இந்த அதிரடிப்படையில் செயல்படும்.