சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஆசிரியை சண்முகப்பிரியா, வாலிபர் கவுதம் என்பவரின் டார்ச்சர் காரணமாக கடந்த 17ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கவுதமை கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என சண்முகப்பிரியாவின் தாயார் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இன்று வாலிபர் கவுதமை கைது செய்தனர். அவரிடம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.