சேலம் கிச்சிப்பாளையம் ஏரிக்கரை குருவிபனை மின்சாரவாரிய அலுவலகம் அருகில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா மற்றும் அமாவாசை பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று இரவு 10.30 முதல் 11.30 மணிக்குள் சக்தி அழைப்பு, 11.30 முதல் 12.30 மணிக்குள் சிவன் சிறப்பு அபிஷேகம், மற்றும் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெறும். நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமாவாசை அன்று குறத்தி வேடம் இட்டு பூஜை கூடை புறப்படும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.