சேலத்தில் டாக்டர்களை தாக்கியவர் கைது

0பார்த்தது
சேலத்தில் டாக்டர்களை தாக்கியவர் கைது
ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த நித்திஷ் (27) மற்றும் திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த மோகன் (29) ஆகிய இரண்டு மருத்துவர்கள், சேலம் அரியானூரில் இளம்பெண்ணையும் அவரது தோழியையும் சந்திக்க காத்திருந்தபோது, பாரப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) உள்ளிட்ட மூவரால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஹரிஹரன் கைது செய்யப்பட்டார்.