சேலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் கைது

612பார்த்தது
சேலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் கைது
சேலம் அம்மாபேட்டை பகுதியில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த தவமணி (60) என்பவரிடம், நஞ்சம்பட்டியை சேர்ந்த சங்கர் (55) என்பவர் டூவீலருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இதற்கு தவமணி மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சங்கர் தவமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தவமணி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.