சேலத்தில் இளநீர் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

468பார்த்தது
சேலத்தில் இளநீர் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தங்கவேல் (49) நேற்று காலை ரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்றபோது, போயர் தெருவைச் சேர்ந்த முருகன் (35) என்பவர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து தங்கவேல் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி