சேலத்தில் டீக்கடை தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவர் கைது

0பார்த்தது
சேலத்தில் டீக்கடை தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவர் கைது
சேலம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த தமுமூல் அன்சாரி (45) என்பவர் சாரதா கல்லூரி அருகே உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (27) என்பவர் டீக்கடைக்கு வந்து, தமுமூல் அன்சாரியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 2,200-ஐப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விஜயை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி