சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

4பார்த்தது
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சேலம் சின்னதிருப்பதி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தி வந்த சூர்யபிரகாஷ் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி மாட்டு தீவனத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி