சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயச்சந்திரன், நண்பர் வீட்டில் மது அருந்தும்போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.